Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வது இடத்தைப் பிடித்த திருச்சி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை ரெயில் நிலையம் ரூ.108 கோடியுடன் 5-வது இடத்தையும் பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து திருச்சி ரெயில் நிலையம் ரூ.86.58 கோடி வருவாய் ஈட்டி தெற்கு ரெயில்வே அளவில் 8-வது இடத்தையும் தமிழக அளவில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதனையடுத்து கடந்த  2020-2021 ஆம் நிதியாண்டில் கொரோனா பரவல் காரணமாக திருச்சி கோட்டம் வழியாக விரைவு ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. மேலும் பயணிகள் ரயில்கள் இயக்க ஆரம்பித்ததால் வரும் காலங்களில் பயணிகள் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |