தென்கொரியாவில் மீண்டும் கொரோனா எழுச்சி பெற தொடங்கியுள்ளது.
தென்கொரியா நாட்டில் மீண்டும் கொரோனா நோய் தொற்று எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் கொரோனா நோய் தொற்று தினசரி பாதிப்பாக சராசரி 72 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. இங்கு நேற்று காலையுடன் ஒரு நாளில் புதியதாக 1 லட்சத்து 285 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 99 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு கொரோனாவின் கடுமையான பாதிப்பினால் 177 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா நோய் தோற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கையானது 24 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.13% ஆகும்.