Categories
உலக செய்திகள்

“குரங்கம்மை வைரஸ்” இணையதளத்தில் தவறான செய்திகளை பரப்பக்கூடாது…. WHO தலைவர் விளக்கம்….!!!

குரங்கம்மை வைரஸ் பற்றி தவறான தகவல்களை பரப்பக் கூடாது என WHO தெரிவித்துள்ளது.

உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், புதிதாக உலக நாடுகளில் குரங்கம்மை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இதுவரை 75 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் 4 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குரங்கம்மை வைரஸ் தொடர்பாக WHO தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கடந்த 23-ஆம் தேதி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது குரங்கம்மை வைரஸ் என்பது உலக அளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த வைரஸ் தொற்று 75 நாடுகளில் பரவியுள்ள நிலையில், குரங்கம்மை வைரஸை சர்வதேச நெருக்கடியாக WHO அறிவித்தது. இந்த வைரஸ் தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் 70 சதவீதமும், அமெரிக்கா 25 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 78 நாடுகள் அடங்கும். அதன் பிறகு கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பற்றிய தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். அதுபோன்று குரங்கம்மை வைரஸ் குறித்தும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது என்றார். மேலும் தவறான கருத்துக்களை பரப்புவதை தடுப்பதற்கு பத்திரிக்கை நிறுவனங்களும், சமூக வலைதளங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் உலக சுகாதார அமைப்புக்கு ஒத்துழைப்பு தர  வேண்டும் என்றார்.

Categories

Tech |