சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனமே ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனமானது ஜெனிவாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்திற்குரிய 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கியமான தகவல்களும் கடவுச்சொற்களும் வெளியானது.
இதையடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெனிவாவின் மாகாண அரசு, விமான நிலையம், பல்கலை மருத்துவமனை, தனியார் வங்கிகள், சட்ட நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், பொது மருத்துவமனைகள் போன்றவை அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பதால் பாதுகாப்பு தொடர்பில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.