தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் தமிழிலும் படம் நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் இளம் பெண்கள், சின்ன குழந்தைகள் என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டேஷனும் நடித்துள்ளார். இந்த படம் ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம்எம்ஏ பட்டத்தை எப்படி வெல்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியீடு விழா நடைபெற்றது.
இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே காபி வித் கரன் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் பிரமோவில், கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவர் கொண்டாவிடம் கரன் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவர்கொண்டா இது வேண்டாம் என பதில் அளிக்கிறார். இறுதியில் கார் என்று கூறுகிறார். அதற்கு கரண் காருக்குள் மூவருமா கேள்வி எழுப்புகிறார்கள். இல்லை என்று விஜய் தேவர்கொண்டா மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ காபி வித் கரன் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது. ஆனால் விஜய் தேவர் கொண்டாவின் பர்சனல் லைஃப் குறித்த கரனின் கேள்வி நிச்சயம் சர்ச்சை உண்டாகும் என்று கூறப்படுகிறது.