உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் உள்ள காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடைய மனைவி ஜெலன்ஸ்காவை 26 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததாக கூறினார். மேலும் அவரை தனது மிக நெருக்கமான தோழி எனவும் விவரித்தார். இதுகுறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவுகடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே மனைவி, ஒரே குடும்பம், ஒரேகாதல் என்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த போர் காரணமாக ஏற்பட்ட பிளவை நாங்கள் சமாளிக்கிறோம்.
இது தங்களுக்குள் இருக்கும் அன்பை மேலும் ஆழப்படுத்தி உள்ளது. இன்னும் நாங்கள் தொடர்ந்து காதலித்துக் கொண்டு இருக்கிறோம். நான் எண்ணி பார்த்ததைவிட அவர் மிகவும் ஊக்கமுடையவர் என்பதை தற்போது அறிந்துகொண்டேன். நான் எனது குடும்பத்தை இழந்துதவிக்கிறேன். அவர்களை கட்டியணைக்க வேண்டும் என தோன்றுகிறது. இதற்காக அவர்களை ஆபத்தில் சிக்கவைக்க நான் விரும்பவில்லை” என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து அவருடைய மனைவி ஜெலன்ஸ்கா கூறியதாவது “தன்னுடைய கணவர், தன் இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்தார். கடந்த 5 மாதங்கள் உக்ரைனில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் மிக மோசமான காலமாக இருக்கிறது.
எங்களது உணர்ச்சிகளை நாங்கள் எப்படி சமாளிக்கிறோம் என்பதே தெரியவில்லை. போர் துவங்கி 5 மாதங்கள் ஆகிறது. இதனிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரால் குழந்தைகளை பார்க்க நேரமில்லை. இது எங்களுக்கு கடினமான நேரம் ஆகும். பல மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர் சென்ற சில மாதங்களாக வெளியே முகம் காட்டியுள்ளார். அத்துடன் போரில் தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளார். அண்மையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் அரசியல் கூட்டமைப்பில் பேசிய அவர், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் முழுவதும் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்திற்கு பரவலாக ஆதரவு இருக்கிறது. மேலும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “எங்களுடைய நாடு முழுதும் கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா எரிவாயு போன்றவையெல்லாம் ஒரு விஷயமே அல்ல. தற்போது நடந்து கொண்டிருக்கும் போருடன் ஒப்பிடுகையில் அவையெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல. எங்களுடைய மகன் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என ஆசைப்படுகிறான். அவ்வாறு வரும் காலத்தில் நடந்தால் மிகவும் பெருமையாக எண்ணுவேன். அத்துடன் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகினாலும் அந்நாட்டு அரசியலில் அவர் தொடர்ந்து இருப்பார். அதன் வாயிலாக அவருடைய ஆதரவு உக்ரைனுக்கு எப்போதும் கிடைக்கும்” எனவும் அவர் கூறினார்.