தமிழகத்தில் தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற பணிகள் வழங்க ஏதுவாக அடுத்த மூன்று வருடங்களுக்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 4681 பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்காலிக பேராசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.