இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு பணிக்காக 22 கோடி பேருக்கு மேல் பதிவு செய்திருந்த நிலையில் அதில் வெறும் 7.22 லட்சம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் ஒரு சதவீதம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 90,288 பேருக்கு மட்டுமே மத்திய அரசின் வேலை கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2021-22ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை “மிஷன் முறையில்” பணியமர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.