Categories
சினிமா

“தனுஷ் பிறந்தநாள்”…. வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட பிரசன்னா…. வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தன் 40வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தன் சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷிற்கு பிறந்தநாள்வாழ்த்து தெரிவித்து, அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இயக்குனர் மித்ரன்ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து நானேவருவேன், வாத்தி ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷின் பிறந்தநாளையொட்டி வாத்தி படக்குழு இன்று டீசர் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |