Categories
தேசிய செய்திகள்

மோடியின் PLI திட்டம்….. கிடைத்த பலன்கள் என்னென்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

இந்தியாவை டிஜிட்டல் மையமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். அதிலும் மின்னனும் பொருள்களுக்கு மத்தியில் மொபைல் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதனை சரி செய்வதற்காக பிரதமர்  உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்க தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தற்போது நல்ல பலன் கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதாவது PLI திட்டத்தினால் உள்நாட்டில் மொபைல் போன்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2021-22 நிதியாண்டில், உலகளாவிய செல்போன் உற்பத்தி 27.15% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில்  2021-22 நிதியாண்டில், 2020-21 நிதியாண்டை விட இந்தியாவில் மொபைல் போன்களின் உற்பத்தி 126.11% அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல்  மின்னணு பொருள்களின் ஏற்றுமதியிலும் இந்தியா லாபம் அடைந்து வருகிறது. மே மாதத்தில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 47.37 %, ஜூன் மாதத்தில் 60.70% அதிகரித்துள்ளது. பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 12%, மே மாதத்தில் 3.02% அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு சாதனங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்க மார்ச் 2020 ஆம் ஆண்டு PLI திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மின்னணு உபகரணங்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் ஊக்கத்தொகை பெற தொடங்கினர். இதுவரை இந்த தயாரிப்பாளர்களுக்கு ரூ.1781.02 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக 314 யூனிட்டுகளை நிறுவன ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் 217 யூனிட்களை ரூ.31,416 கோடிகளை இதுவரை முதலீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |