Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட கல்வியமைச்சர் …!!

ஜார்க்கண்ட் மாநில கல்வியமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ, மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து சத்துணவு சாப்பாடை சாப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரதி மாவட்டம் மஞ்சிதி கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ சென்றார்.

அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு உண்டார். பின்னர், மாணவர்களிடையே உரையாடி அவர்களுக்கு புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை வழங்கினார். சத்துணவின் தரத்தை உயர்த்த அமைச்சர் உத்தரவு பிறப்பித்ததாகவும் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ பள்ளிகளுக்கு சென்று தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார். அவரின் இந்த செயலுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |