குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர்.
பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், இஸ்லாமிய மதகுருமார்கள் போராட்டங்களை தூண்டிவிடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும், கண்டன முழுக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.