Categories
விளையாட்டு

அதியா ஷெட்டி, கேஎல் ராகுல் போட்டோ…. இன்ஸ்டாகிராமில் வெளியீடு…. வைரல்….!!!!!

இந்திய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக கே.எல் ராகுல் விளங்கி வருகிறார். இப்போது அவர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவருடன் ஹிந்தி நடிகையான அதியா ஷெட்டியை இணைத்து பல்வேறு வதந்திகள் வந்த சூழ்நிலையில், அதியா ஷெட்டியும் கே.எல்.ராகுலும் தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாக தெரிவித்தனர். இருவரும் கூடியவிரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த நிலையில் அதியா ஷெட்டியும், கேஎல் ராகுலும் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அதியா ஷெட்டி பதிவுசெய்தார். மிகவும் பிடித்தமான ஒன்று என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கேஎல் ராகுல் இதய எமோஜியை பதிவிட்டார். இப்புகைப்படத்தை லைக் செய்து கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறினர். அத்துடன் கிரிக்கெட் வீரரான குர்ணால் பாண்ட்யா, நடிகை மாளவிகாமோகனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அன்பை வெளிப்படுத்தும் இதய எமோஜிக்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படத்துக்கு சுமார் 4 லட்சம் லைக்குகள் குவிந்திருக்கிறது.

 

Categories

Tech |