இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அதிபர் கோத்தபயா சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டார். அவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொது சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலங்கையில் மீண்டும் அவசரநிலையை ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஜூலை 19ஆம் தேதி அறிவித்தார்.
அதன் பிறகு நடந்து முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கே முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமலில் உள்ள அவசரநிலை சட்ட வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.