Categories
உலக செய்திகள்

“அணு ஆயுதப் போர்” உலகை நெருங்கும் பேராபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர் ஸ்டீபன் லோவ்கிராவ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி உலகம் முழுவதும் ஆபத்தான அணு ஆயுதப் போர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணு ஆயுத போருக்கு பின்னால் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அணு ஆயுத போரானது தவிர்க்கப்பட்டது. இதற்குக் காரணம் நோட்டோ அமைப்புடன் ரஷ்யா பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தியது தான். இதுபோன்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது சூழல் கிடையாது.

அதன் பிறகு ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய 2 நாடுகளும் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு போட்டி போட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளும் அணு ஆயுதங்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மற்றும் மாஸ்கோவில் நடைபெற்று வரும் ரகசிய கூட்டங்களை பார்க்கும் போது எப்போது வேண்டுமானாலும் உலகிற்கு ஆபத்து வரலாம். மேலும் ரஷ்யாவும், சீனாவும் ஒரு நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் கண்டிப்பாக அணு ஆயுத போர் நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |