கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும் இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பது மிக அவசியமாகும். ஆனால் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்று தெரிகின்றது. அதாவது சுயலாபத்திற்காக கல்வி தகுதியற்ற தூய்மை பணியாளர்களை சுகாதார மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதாவது படித்தவர்களை நியமித்தால் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார மண்டல அலுவலர்களுக்கு ஈகோ பிரச்சனை வருகின்றது. அவர்கள் பணி விதிமுறைகளை நன்றாக தெரிந்து வைத்திருப்பதால் முறைகேடான வகையில் வேலை வாங்க முடியாது.
அதுவே கல்வி தகுதியற்ற நபர்களை அமர்த்தினால் மஸ்டூல் ஊழல் முதல் ஓட்டல்களுக்கு உரிமம் வழங்குவது வரை கைவரிசை காட்டி விடலாம். மேலும் தனியார் ஓட்டல்கள் மளிகை கடைகள் கடைவீதிகளில் இருந்து பெறப்படும் குப்பைகளுக்கு பெரிய தொகையை ஏற்றுக் கொள்ள வாய்ப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால் கோவை மாநகராட்சிக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு பிரதிபலனாக அவ்வபோது உயர் அதிகாரிகளை சுகாதார மேற்பரப்பு நன்றாக கவனித்து வருவதாகவும் பேச்சு அடிப்படையில் இது குறித்து தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் பேசும்போது கோவை மாநகராட்சியில் 2500 க்கும் மேற்பட்ட நிரந்தரம் மற்றும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் பணியிடங்கள் இருக்கின்றது.
இதில் பலரை வேலைக்கு எடுக்காமல் வருகை பதிவீட்டில் முறைகேடு செய்து வருகின்றனர். மாநகராட்சியில் மனிதக் கழிவை மனிதர்களை அகற்றும் முறையை ஒழிக்க பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களிடம் தமிழ்நாடு மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் 2.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரோபோக்கள் வாங்கப்பட்டிருக்கின்றது. இவற்றை சுகாதார மண்டல அலுவலர் ஒருவரிடம் கொடுத்து பத்திரமாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அந்த ரோபோக்கள் எங்கே என்பது தற்போது கேட்டால் தெரியாது என்று மண்டல அலுவலர் உள்ளிட்ட பலரும் பதில் அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், பணி செய்யும் தளவாடங்கள் போன்றவற்றிற்கு மாநகராட்சி ஒதுக்கீடு செய்யும் விதியை முறைகேடாக பயன்படுத்தி தரமற்ற பொருட்களை வழங்கி வருவதாக சுகாதார ஆய்வாளர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக ஐந்து ரோபோக்கள் வாங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீபத்தில் அறிவு வெளியிட்டிருப்பது அடுத்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ஏற்கனவே வாங்கப்பட்ட ரோபோக்கள் எங்கே என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போது புதிதாக ரோபோக்கள் வாங்குவது அறிவிப்பு என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இத்தகைய குத்துச்சாட்டுகள் அனைத்தும் மண்டல சுகாதார அலுவலகங்களுக்கு எதிராக திரும்பி இருக்கின்றது. அதனால் உரிய கல்வி தகுதி அடிப்படையில் பணியாளர்களின் நியமிக்க வேண்டும் முறைகேடுகள் அற்ற நிர்வாகமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.