மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காசி வீட்டின் முன்பு உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பியில் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காசியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.