பேருந்தில் வைத்திருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் கல்குவாரி உரிமையாளரான சுந்தர வடிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுந்தரவடிவேல் தனது குடும்பத்தினருடன் தனியார் பேருந்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலும் மகனின் படிப்புக்காக வைத்திருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சுந்தர வடிவேல் ஒரு பையில் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் பெரியகுளம்- வத்தலகுண்டு சாலையில் துணை மின் நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது சுந்தரவடிவேல் தனது குடும்பத்தினருடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பையில் இருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு சுந்தர வடிவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுந்தர வடிவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹோட்டலின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணத்தை கொள்ளைடித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.