Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு மீண்டும் சலுகை….? ஆனா ஒரு கண்டிசன்…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பதிலளித்தார். பயணிகளுக்கு பல்வேறு வகையில் வழங்கப்படும் சலுகைகளால் ரயில்வேவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே வருவாய் பாதிக்கப்பட்டு இருப்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

இவ்வாறு ரயில்வே அமைச்சர் கூறியதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து சீனியர் சிட்டிசனுக்கு மீண்டும் சலுகைகளை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சலுகைகளை பெற பல்வேறு கண்டிஷன்களையும் விதிப்பதற்கு அரசு திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 70 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கலுக்கு மட்டுமே சலுகைகளை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சீனியர் சிட்டிசன் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |