Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல் அரசு மருத்துவமனையில் காச நோய் விழிப்புணர்வு கூட்டம்”…. பங்கேற்ற டாக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்….!!!!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காச நோய் குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் தலைமை தாங்க மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து காசநோய் அறிகுறிகள், பரவும் விதம் உள்ளிட்டவற்றை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டாக்டர்களுக்கு துணை இயக்குனர் வாசுதேவன் சான்றிதழ்களை வழங்கினார்.

Categories

Tech |