Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்…. திடீரென பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகராட்சியில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான  தற்போது கம்பம் கமிஷனர் குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டது.

இதனையடுத்து பின்னால் வந்த ஜீப்பும் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி டிராக்டர் மற்றும்  ஜிப்பை பள்ளத்தில் இருந்து  மீட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |