Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்…. அம்மாவாசையை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கம்….!!!!

அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அம்மாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று ஆடி மாத அமாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக வேலூரில் இருந்து 130 பேருந்துகளும், சென்னையில் இருந்து 40 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 25 பேருந்துகளும் இன்று அதிகாலை முதல் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகள் குறித்து அந்தந்த பேருந்து நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |