Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்… முதல் பாடல் ஜூலை 31 ஆம் தேதி வெளியீடு…. படக்குழு கொடுத்த அப்டேட்….!!!!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகயிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்திருக்கின்ற இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த படத்தின்  முதல் பாடல் பொன்னி நதி ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக் குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Categories

Tech |