Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலிருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் என்ற பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு லாரி தவிடு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது மோதியது. இதனால் தவிடு மூட்டைகள் சாலையில் விழுந்தது. இதனை தொடர்ந்து திருப்பூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் விபத்தில் சிக்கிய லாரி மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை வலது புறம் திருப்பியுள்ளார்.

அப்போது சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் சக்கரம் சிக்கி நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |