Categories
தேசிய செய்திகள்

2021-2022 வருமான வரி தாக்கல்…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே…. உடனே ஆன்லைன் வேலையை முடிங்க…..!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடைசி தேதி நெருங்கி வருகிறது கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவே முடிக்கலாம். இதோ அதற்கான முழு விவரம்.

ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி?

  • முதலில் https://incometaxindia.gov.in/Pages/default.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • பிறகு உங்கள் பான் எண் வைத்து Log in செய்யவும்.
  • உரிய ஆண்டின் (2021-22) கீழ் ‘Download’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதில் ITR-1 (Sahaj) படிவத்தை கிளிக் செய்யவும். உங்கள் படிவம் Excel வடிவில் டவுன்லோடு செய்யப்படும்.
  • படிவத்தை திறந்து Form-16 படிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  • விவரங்களை கணக்கிட்டு Excel படிவத்தை ‘Save’ செய்யவும்.
  • பிறகு இணையதளத்தில் ‘Submit Return’ ஆப்ஷனை கிளிக் செய்து Excel Sheetஐ அப்லோடு செய்யவும்.
  • உங்களிடம் டிஜிட்டல் கையொப்பம் கேட்கப்படும்.
  • தற்போது  வருமான வரித் தாக்கல் முழுமையாக நிறைவேறியது என்ற செய்தி வரும்.
  • இதற்கான Acknowledgement உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

Categories

Tech |