நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் பல்வேறு நிபதனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
அதாவது மத்திய மனிதவள துறையின் சார்பாகவும் பி யு சி இரண்டாம் ஆண்டு தேர்வில் எண்பது சதவீதம் அதிகமாக மதிப்பெண் பெற்ற உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது அதற்கான விண்ணப்பங்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 31ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஒப்படைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவித்தொகை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 080-23311330 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.