தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் வருடந்தோறும் பொது கலந்தாய்வு மூலம் 1.50 லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.