தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் எதிரொலியாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.