17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் அட்டை கிடைக்கும் என்றும் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு 18 வயது நிறைவடையும் நாளில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியும் என ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அனைத்து மாநில ஆணையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். 2023ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இப்படி இருக்கும். அடையாள அட்டைக்கான புதிய விண்ணப்பம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கிடைக்கும்.