Categories
மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்…. கரும்புத் தோட்டம் சேதம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

தர்மபுரி மாவட்டம்  காரிமங்கலத்தில் உள்ள எலுமிச்சன அள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 3 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இந்த யானைகள் அங்குள்ள கரும்பு தோட்டத்தை நாசம் செய்து வருகிறது. இதனால் வனத்துறையினர் 3  யானைகளையும் விரட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அருணேஸ்வரர் மலைகோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோட்டத்தில் யானைகள் முகாமிட்டிருந்தது.

இதனை பார்த்த வனதுறையினர் மற்றும் போலீசார் விரட்டி அடித்தனர். தற்போது 3 யானைகளும் சஞ்சிவராயன் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த மூன்று யானைகளை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருவதுடன் இரவு நேரத்தில் மலைப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் யானைகள் காரிமங்கலம் நகர மற்றும் அருகில் உள்ள பகுதி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |