Categories
உலக செய்திகள்

போரில் முன்னேறி வரும் உக்ரைன் படையினர்…. ரஷ்யாவை தடுக்க பயங்கர திட்டம்…!!!

உக்ரைன் படையினர், ரஷ்யா கைப்பற்றிய முக்கிய நகரத்தை மீட்க தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் உளவுத்துறை உக்ரைன் படையினர் ரஷ்யாவிற்கு கொடுக்கும் பதிலடி தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் முக்கியத்துவம் வாய்ந்த அன்டோனிவ்ஸ்கி என்ற பாலம் ஏவுகணை வீசி தகர்க்கப்பட்டது. இதனால் பாலம் முற்றிலுமாக சேதமடைந்தது.

ரஷ்யப்படை வீரர்களுக்கு உணவுகளையும், ஆயுதங்களையும் கொண்டு செல்வதை தடுப்பதற்காக உக்ரைன் படையினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அந்நகரை மீட்க உக்ரைன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை முன்னேற்றம் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |