மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஜெண்டா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலை செய்து வருகிறார் .அதன்படி அவர் விறகு எடுக்க காட்டிற்கு சென்றபோது அங்கு பளபளப்பான கல்லை பார்த்தார். அதன் பிறகு அதனை வீட்டிற்கு எடுத்து வந்து தனது கணவரிடம் காட்டினார். அப்போதுதான் பட்டய தீட்டாத வைரக்கல் என்று தெரியவந்தது. இதனையடுத்து ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்த பெண் வைரத்தை அரசு அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து 4.39 கேரட் எடையுள்ள இந்த வைரக்கல் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.91,16,395.22 இலங்கை மதிப்பில் என இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரத்தை அதிகாரிகள் ஏலத்தில் விட முடிவு செய்தனர். அந்த பணத்தை ஜெண்டாவிதமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜெண்டாபாய் கூறியது, ஏலத்தில் கிடைக்கும் பணத்தை எனது வீட்டின் கட்டுமானத்திற்கும், எனது மகளின் திருமணத்திற்கும் பயன்படுத்துவேன் என்று கூறினார். மேலும் தனது மனைவிக்கு வைரம் கிடைத்ததின் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஜெண்டாவின் கணவர் தெரிவித்துள்ளார்.