Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…. ஆணையருக்கு லட்சம் அபராதம்…. மேல் முறையீடு தாக்கல்….!!!!!!!!

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையை துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடவடிக்கை விரைவுப்படுத்த கடந்த 2021 ஆம் வருடம் ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர்  தனது அறிக்கையில் கூறவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது பற்றி உதவியாளர் தனது வருத்தத்தை பதில் மனுவில் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும் உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50,000 ரூபாயும் என அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து சமநிலையை அறநிலையத்துறை ஆணையர் இணை ஆணையர் உதவி ஆணையர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில்  தனி நீதிபதியின் நிலுவையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத சூழலில் அவருக்கு அபராதம் விதித்தது தவறு. அதே போல் இணை ஆணையர், உதவியாளர் போன்றோர் வழக்கில் பிரதிவாதிகளே  கிடையாது. அதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் முறையிட்டுள்ளனர். மேலும் முறையிட்டை  ஏற்ற நீதிபதிகள் அரசின் மேல்முறையீட்டு வழக்கை வரும்  திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |