Categories
அரசியல்

சசிகலாவுடன் கைகோர்த்த ஓபிஎஸ்…. இந்த சந்திப்பு நடைபெறுவது உறுதி…. ஆதரவாளர்கள் ஆருடம்….!!!!!!!!!

ஓ பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய  எடப்பாடி பழனிசாமியை  கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கிள்ளார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க சசிகலா உடன் ஓ பன்னீர்செல்வம் இணைய  வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் வெளிப்பாடாகவே ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்படவில்லை எனவும் அவர் இன்னும் அதிமுகவில் தான் தொடர்கிறான் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் சசிகலா சந்திப்பு நடைபெறுவதற்கான வேலைகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் சசிகலா ஆதரவாளருமான ஓ ராஜா அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அடுத்தடுத்த நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்பட்டால் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என ஓ பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஒரு சிலர் யோசனை கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் இந்த சந்திப்பு நடைபெறுவது உறுதி என இருவரது ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |