Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிக்கூடத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலையில் பயணம் மேற்கொள்ள போதிய பேருந்து வசதி இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு அரசு பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் மாணவர்களை ஏற்றி கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |