Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குளத்தில் மிதந்த கழிவுகள்…. பல்வேறு தரப்பினர் கோரிக்கை…. அகற்றும் பணியை தொடங்கி வைத்த மேயர்….!!

சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணிகளை மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்துள்ளார்.

காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் சர்வ தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் நீராடிய பின் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இங்கு வழக்கமாக ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண விழாவின்போது தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த குளத்தில் பக்தர்கள் தற்போது நீராட செல்வதில்லை. இந்த குளத்தை பல்வேறு தரப்பினர் தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி தன்னார்வலர்கள் உடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் மேயர் தலைமையில் அனைவரும் ‘என் குப்பை என் பொறுப்பு’ எனும் திட்டத்தின் கீழ் உறுதி மொழி ஏற்றனர்.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் பாலகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகளில் இருந்து கழிவுகள் அனைத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர், இதேபோன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து திருக்குளங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செவிலிமேடு, சதாவரம் பகுதிகளிலும் குளம் தூர்வாரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |