Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தாழ்ந்த கடல்நீர்தாமதமான மட்டம்…. 1 மணிநேரம் தாமதமான படகு சேவை…. ஆர்வத்துடன் சென்ற சுற்றுலா பயணிகள்….!!

கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு ஒரு மணி நேரம் படகு சேவை தாமதமானது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் பின்னர் படகில் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு திரும்பி வருகின்றனர். இதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டத்திற்குச் செல்ல படகுத்துறையில் நீண்ட நேர வரிசையில் காத்திருக்கின்றனர். அப்போது கடலில் நீர் மட்டம் தாழ்ந்ததால் காலையில் 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து காலை 9 மணிக்கு கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் ஒரு மணிநேரம் தாமதமாக தொடங்கியது. அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துவிட்டு சென்றனர்.

Categories

Tech |