Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கபடி பயிற்சியாளராக நடிக்கும் தமன்னா!

தெலுங்கில் உருவாகிவரும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தில் கடைசியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக ஜுவாலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Tamannaah

பிரபல இயக்குநர் சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தில், திகன்கானா சூர்யவன்ஷி, சச்சின் கெடேக்கர், பூமிகா, அஜய், ஜெயப்பிரகாஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். முன்னதாக கோபிசந்த்தின் கேரக்டர்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது தமன்னாவின் கேரக்டர்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |