பிரிட்டனில் ஒன்பது வயது சிறுமி கத்தி குத்து காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனின் பாஸ்டன் நகரில் நேற்று கத்தி குத்து காயங்களுடன் ஒரு சிறுமி உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்திருப்பதாகவும், கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்கள். மேலும் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் ஆதரவு கொடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.