Categories
மாநில செய்திகள்

“சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது”……. பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்……!!!!!

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அவர் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைகழக அளவில் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ- மாணவியர்களுக்கு பிரதமர் மோடி தங்கத்தாலான பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அகமதுபாத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது” என்று நெகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் சென்னை சுற்றி பயண வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |