இந்தியாவில் மருத்துவம் படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பயலே ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயின்று வருகிறார்கள். அவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற foreign medical graduate examination தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பின்னர் இந்தியாவில் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தான் மாநிலம் மருத்துவ கவுன்சிலிங் பதிவை பெற்று மருத்துவராக பணியாற்ற இயலும். இந்நிலையில் தமிழக முற்பட நாடு முழுவதும் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் தமிழகத்தில் மருத்துவராக பணியாற்ற எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரிக்கு 3.2 லட்சம் கட்ட வேண்டி இருந்தது.
அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இரண்டு லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலமாக நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கட்டணம் 30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.