இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில், உலக வங்கி அந்நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று உறுதியாக மறுத்திருக்கிறது.
இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உலக வங்கியும் நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டது. இது பற்றி உலக வங்கி தெரிவித்ததாவது, இலங்கை நீடித்த பொருளாதாரத்திற்குரிய திட்டங்களை சரியாக வகுக்க வேண்டும்.
அதுவரை, அந்நாட்டிற்கு உதவி வழங்கப்படாது. எனினும், அந்நாட்டின் ஏழை மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நாட்டின் நிதி நிலையும், அதனால் ஏற்படும் விளைவுகளும் ஆழ்ந்த வேதனையை தருவதாக உலக வங்கி கூறியிருக்கிறது.