Categories
மாநில செய்திகள்

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போல் தமிழ்நாடு இல்லை.! கடுப்பான மதுபிரியர்கள்..!!

அண்டை மாநிலங்களை போன்று மதுபானம் குறைந்தவிலைக்கு தமிழ்நாட்டில் விற்கப்படவில்லை என மதுபிரியர்கள் வேதனையடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் உள்ளனர். மேலும், இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட அரசு மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மதுபானக்கடைகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மதுபானங்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கப்படாத விலையேற்றத்தால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர் மது பிரியர்கள்.

இதுகுறித்து மது பிரியர்கள் கூறுகையில், “கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி திடீரென விலை உயர்த்தப்பட்டது மிகவும் வேதனையாக உள்ளது. மீண்டும் பழைய விலைக்கே மதுபானங்கள் விற்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.

மதுபான பார் நடத்தும் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “தினசரி வேலைக்குச் செல்பவர்கள் குறைந்த பணத்தைக்கொண்டு மதுபானங்களை அருந்துகின்றனர். மதுபானங்களை பழைய விலைக்கே விற்க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

Categories

Tech |