சென்ற 2014 ஆம் வருடம் இந்தியாவில் 2,48,554 மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகின்றது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் உபாசி அரங்கில் நேற்று முன்தினம் தமிழக மின்சார வாரியம் சார்பாக ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழக பொறியாளர் வரதராஜன் பேசும்போது கூறியுள்ளதாவது, சென்ற 2015 ஆம் வருடம் கிராமப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 மணி நேரமாக இருந்த நிலையில் தற்போது 22.5 மணி நேரமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
சென்ற 2014 ஆம் வருடம் இந்தியாவில் 2,48,554 மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் நுகர்வோர் குறைகளை கேட்டு அறிவதற்காக மின்வாரியத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அழைப்பு மையங்கள் இருக்கின்றது. மாநில அளவில் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு இதுவரை 9,72,180 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றது. தமிழக அரசின் முயற்சியால் சென்ற நிதியாண்டில் மின் உற்பத்தி நிலையங்களில் திறமையான செயல்பாடு மற்றும் வட்டி விகித குறைப்பு ஆகிய பல நடவடிக்கைகளால் 2200 கோடி சேமிக்கப்பட்டிருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.