Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல்…. புகையிலை பாக்கெட்டுகளில் தீங்கு குறித்த எச்சரிக்கை படம்…. மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்…!!!

புகையிலை பாக்கெட்டுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பாக்கெட்டுகளில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய படமானது பிரசுரிக்கப்படும். இந்த புதிய படம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதன் பிறகு 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும் புகையிலை பொருட்களில் புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலே இறந்துவிடுகிறார்கள் என்ற எச்சரிக்கை படம் இடம்பெறும்.

கடந்த  2008-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு வரும் புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் புதிய விதிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 21-ம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகளை மீறி சிகரெட் மற்றும் புகையிலை பேக்கேஜ் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத்துடன் கூடிய சிறைதண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |