தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிபியாட் போட்டி சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டதற்கும், இந்த போட்டியை சென்னையில் நடத்துவதற்கு உதவி செய்ததற்கும் பிரதமராகிய உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தாங்கள் உதவி செய்ய வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு ஆசிய ஒலிம்பிக் நிர்வாக குழு கவுன்சில் கூட்டத்தின் கொள்கை கூட்டத்தின் போது உத்தரவு வழங்கிட வேண்டும். இதற்கு மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் உத்தரவாதம் வழங்கி சென்னையில் போட்டி நடைபெற தாங்கள் ஒத்துழைப்பு தந்து உதவி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கடந்த மே மாதம் 23-ஆம் தேதி மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆசிய கடற்கரை ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடைபெற தாங்கள் உதவி செய்ய வேண்டும் என முதல்வராகிய நான் பிரதமரிடம் கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.