சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள இம்மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் சாமியை தரிசனம் செய்பவரின் பாவங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
பின்னர் இந்த வருடம் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கால்நாட்டு விழா நடைபெற்ற்றுள்ளது. பிறகு பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்கு குடில்கள் அமைத்து தங்கி இருந்துள்ளனர். இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றில் நீராடி பேச்சியம்மன் சன்னதி, பட்டவராயர் சன்னதிகளுக்கு முன்பு பொங்கலிட்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சங்கிலிபூதத்தார் சன்னதிகள் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கியுள்ளனர். மேலும் இம்மாவட்டம் நிர்வாகம் சார்பில் தீயணைப்புத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.