தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு : 200 கிராம்
முளைக்கீரை : கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் : 2
எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : தேவையான அளவு
மல்லித்தழை : தேவையான அளவு
செய்முறை:
உளுந்தம் பருப்பை ஊறவைத்து .பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு. பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள எந்த வகை சட்னியும் ஏற்றது.