Categories
மாநில செய்திகள்

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி…. அன்புமணி ராமதாஸின் ஐடியா…. தமிழக அரசு ஏற்குமா….?

பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு நிதியுதவியின் மூலம் 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு சாத்தியம் இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் மாவட்டத்திற்கு வரும் மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டமானது சற்று பின்னடைந்துள்ளது.

அதன்பிறகு மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப் பட்டுள்ளன என்றும், மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காததால் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்க கூடாது எனவும், மாநில அரசின் சொந்த நிதி உதவி மூலமாக மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |