Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்துக் கொலை”…. வாலிபர் கைது…!!!!!

முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் நேற்று காலை 9 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின் விசாரணை நடத்தியதில் முன் விரோதம் காரணமாக மாணிக்கவேல் என்பவர் சுரேஷை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது. சுரேஷ் அடிக்கடி வெளியூரில் சுற்றிவிட்டு அவ்வப்போது ஊருக்கு வருவாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் ஊருக்கு வந்ததை தொடர்ந்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் முதல் கட்ட விசாரணையில் பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |